வணக்கம் ...
தோழர்களே !!!
நாம் அனைவரும் பல வலைப்பூக்களில் வீடியோ டுடோரியல்களை கண்டிருப்போம் அதிலே அவர்கள் கணினியில் செய்யும் செயல்களை வீடியோவாக செய்திருப்பார்கள அதை அவர்கள் சில ஸ்க்ரீன் ரெகார்டிங் மென்பொருள் மூலம் ஸ்க்ரீன் ரெகார்ட் செய்து வீடியோவை அவர்கள் வலைப்பூவில் பதிவேற்றி இருப்பார்கள் ....
அதே போல் இனி நீங்களும் நீங்கள் கணினியில் செய்யும் வேலைகளை வீடியோவாக ரெகார்ட் செய்யலாம் அதை உங்கள் வலைப்பூவிலோ அல்லது தளத்திலோ பதிவிடலாம் ...சும்மா பொழுது போகவில்லை என்றாலும் செய்து பார்க்கலாம் ...
நிறைய பேர் இதுபோன்ற ஸ்க்ரீன் ரெகார்ட் செய்ய இணையத்தில் தேடி வீனா போன மென்பொருள்களை பயன்படுத்துவர் இத்துணைக்கும் அது trial version ஆக இருக்கும் இருப்பினும் வேறு வழியில்லாமல் அதை பயன்படுத்திகொண்டிருப்பர் அது போன்ற மென்பொருள்களில் அவ்வளவு வசதிகள் கூட இருக்காது ஏன் வேகமாக கூட செயல்படாது ஆனால் இந்த பிரச்சனையில் இருந்து விடு பட நான் கூறும் மென்பொருள் உங்களுக்கு கண்டிப்பாக உதவும் ...........
நான் உங்களுக்கு இன்று அறிமுக படுத்த இருக்கும் screen recording மென்பொருள் மிகவும் வேகமாக செயல்படகூடியது பல்வேறு வசதிகளை கொண்டது ஸ்க்ரீன் ரெகார்ட் செய்தவுடன் avi formatஇல் பெற்றுகொள்ளலாம் ....
நம் கணினியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் ஸ்க்ரீன் ரெகார்ட் செய்ய உதவுகிறது ......
ஸ்க்ரீன் ரெகார்ட் செய்யப்படும் வீடியோவில் cursurக்கு பின்னணியில் வெவ்வேறு நிறங்களில் தெரிய வைக்க இம்மென்பொருள் அதற்கான வசதியை நமக்கு வழங்குகிறது ....மேலும் எண்ணற்ற நிறைய வசதிகளை வழங்குகிறது ...
மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கே செல்லவும்
இந்த மென்பொருள் வெறும் 1.11mb அளவே உடையது டவுன்லோட் செய்து பயன்படுத்தி பாருங்கள் .......
உங்கள் கணினியில் இந்த மென்பொருளை நிறுவியவுடன் அந்த மென்பொருளில் உள்ள வீடியோ optionஇல் சென்று quality என்பதில் 100 என செட் செய்துகொள்ளவும் வேறு எதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் ...
நன்றி .....
லிங்க் வேலை செய்யவில்லை
ReplyDeleteதோழா லிங்க் நன்றாக தான் வேலை செய்கிறது .....மறுபடியும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்
Deleteநன்றி ...