Saturday 2 February 2013

காதல் மிகவும் வலியை தரக்கூடியது


என் நண்பனின் காதல் கதை எனக்கு மிகவும் மன வேதனையாக உள்ளது ....
என் நண்பன் ஒருவன் (பெயரை குறிப்பிட விரும்பவில்லை ) நன்றாக படிக்க கூடியவன் .

அவன் மிகவும் நல்ல குணமும் கொண்டவன் என் இதையத்தில் தனி இடம் பிடித்தவன்

அதற்க்கு ஒரு சின்ன உதாரணம் :
என்னுடைய மற்றொரு நண்பன் என்னிடம் மிகவும் நன்றாக பழகுவான் அவன் அவனுடைய தங்கை ஒரு வீனா போன பையனை காதலித்ததாகவும் அது எனக்கும் என் குடும்பதுக்கும் பிடிக்கவில்லை என்றான் (அவன் தங்கை காதலித்தது 11ஆம் வகுப்பில் )...
நான் அதற்கு நீ மட்டும் ஒரு பெண்ணை காதலிக்கலாம் ஆனால் உன் தங்கையை காதலிக்க அனுமதிக்க மாட்டாய என்றேன் அவன் அதற்கு டே அவள் ஒரு நல்ல பையனை காதலித்தால் பரவாயில்லை இவள் மிகவும் நன்றாக படிப்பால் (இப்பொழுது சேலம் கருப்பூர் அரசு கல்லூரியில் படிக்கிறாள் என்று கேள்விபட்டேன் ) ஆனால் என் தங்கை காதலிக்கும் பையனோ ஒரு மோசமானவன் ,ரௌடி போன்றவன் ,மோசமாக படிப்பான் இன்னும் நிறைய அடிக்கி கொண்டே போனான் ....ஆனால் அவன் கூறியது அனைத்தும் ஏற்று கொள்ளும்படி இருந்தது ஆனால் அவன் தங்கை இந்த வீட்டுக்கு தெரிந்து சிறிது நாட்களிலேயே இந்த பிரச்சனை ஒரு தீர்வுக்கு வந்துவிட்டதாகவும் கூறினான் ........

நாங்கள் மூவரும் நல்ல நண்பர்கள் என்று இருந்தாலும் தன் தங்கையை பற்றி என்னிடம் மட்டும் கூறினான் என் நண்பன் என்னுடைய மற்றொரு நண்பனோ"என்னடா அவன் உன்கிட்ட என்ன சொன்னான் தனிய பேசி கிட்டு இருந்தீங்க "(அப்பொழுது தான் வீட்டிலிருந்து வந்தான் ) என்றான் ....நானும் ஒன்னுமில்லடா நம்ம கலை ஒரு ரகசியம் சொன்னான் அவன் தங்கையை பற்றி யாரிடமும் கூறாதே என்றான் அதனால் உன்னிடம் கூற யோசிக்கிறான் இருந்தாலும் பரவாயில்ல நீ யாரிடமும் சொல்ல மாட்டாய் என்று சொல்ல ஆரம்பித்தேன் ஆனால் உடனே அவன் "இல்ல என்கிட்டே சொல்லாத ஏதாவது முக்கியமான ரகசியமா அல்லது அந்த பொண்ணு வாழ்க்க சம்பந்தமா இருக்கும் அதனால சொல்லாத இல்லன கொஞ்ச நாளுல நெறைய பேத்துக்கு பரவனாலும் பரவிடும் அதனால சொல்லாத"என்றான் ........
நீங்களே சொல்லுங்கள் நாம் இவ்வாறு ஒரு நாலாவது இருந்திருப்போமா எதாவது ஒரு ரகசியம் நமக்கு சொல்லவில்லை என்றால் அதை குடைந்து கண்டுபிடிக்காமல் இருக்க மாட்டோம் அதுமட்டுமல்லாமல் பிறரிடமும் சொல்லி விடுவோம் ஆனால் என் நண்பனோ ஒரு பெண்ணை பற்றி தன் தோழனின் தங்கை பற்றி என்றதும் வேண்டாம் என்னிடம் கூறாதே என்று அவன் கூறிய வரிகள் இன்று என் இதயத்தில் பதிந்து கிடக்கிறது .....
சரி அவன் கதைக்கு வருவோம்

அவன் தனது பத்தாம் வகுப்பு தேர்வின்போது தனது அறையில் ஒரு பெண்ணை பார்த்திருக்கிறான் அப்பெண்ணை அவனுக்கு மிகவும் பிடித்ததாம் ....இருவரும் தமிழ் மீடியம் இருப்பினும் வெவ்வேறு பள்ளிகளில் படித்தனர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத நான் 12 வகுப்பு படித்த பள்ளிக்கு வந்து தேர்வு எழுதியுள்ளனர் ..
இருப்பினும் இந்த வயதில் வரும் ஈர்ப்பு என்று நினைத்துகொண்டான் ....

பிறகு 12ஆம் வகுப்பில் நல்ல தேர்ச்சி பெற எங்கள் பள்ளியிடம் போட்டியிடும் அதே ஊரில் உள்ள பள்ளியில் தமிழ் மீடியத்தில் சேர்ந்துள்ளான் ...அந்த பெண் அதே ஊரில் உள்ள மகளிருக்கான அரசு பள்ளியில் உயர்நிலை கல்விக்காக சேர்ந்தாள் நானும் என் பத்தாம் வகுப்பு பள்ளியில் இருந்து விடைபெற்று மேலே இருவர் சேர்ந்த பள்ளிகள் இருக்கும் ஊரிலே என் நண்பனின் பள்ளியிடம் போட்டியிடும் பள்ளியில் நான் உயர்நிலை கல்விக்காக சேர்ந்தேன் (நான் ஆங்கில வலி கல்வி கற்றவன் )........
நாங்கள் மூன்று பெரும் சந்தித்த இடம் தான் டியூஷன் என் பள்ளியில் chemistry நடுத்தும் சார் நடுத்துவது புரியாததால் என் பள்ளியில் என்னுடன் படிக்கும் ஒரு நண்பனுடன் கூட்டு சேர்ந்து டியூஷனில் சேர்ந்தோம் நான் சேர்ந்ததோ 12ஆம் வகுப்பில் தான் ஆனால் என் நன்பனோ (இந்த கதையின் ஹீரோ ) 11ஆம் வகுப்பிலேயே சேர்ந்துள்ளான் அவளும் அவனைபோன்றே 11ஆம் வகுப்பிலேயே டியூஷனில் சேர்ந்திருக்கிறாள் .....
ஆரம்பத்தில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் வெறுமனே அந்த பெண்ணை சைட் மட்டும் அடித்து கொண்டிருந்திருக்கிறான் (ஒரு வருடம் முழுதும் ) என் நண்பன் ...
நான் 12ஆம் வகுப்பில் டியூஷனில் சேரும்போது ஆண்கள் குறைவானவர்கள் என்பதால் நாங்கள் இருவரும் மற்றும் ஒரு அண்ணன் தன் தங்கையை பற்றி கவைப்பட்டானே அவனும் நன்றாக பழகி மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆகினோம் .....அப்பொழுது நான் அவர்களிடம் நான் ஒரு பெண்ணை விரும்பியதாக ,இப்பௌதும் விரும்புவதாக கூறினேன் என் கதையை கேட்டுவிட்டு என் நண்பன் எங்கள் இருவரிடமும் தானும் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவளை முதலில் 10ஆம் வகுப்பில் பார்த்ததாகவும் அப்பொழுதே காதல் முளைத்துவிட்டதாகவும் கூறினான் நாங்களும் உடனே படத்தில் வரும் நண்பர்கள் போல அந்த பெண் எங்கே படிக்கிறாள் சொல் நாங்கள் உதவி செய்கிறோம் என்று கூறினோம் ஆனால் அவனோ வேறு ஏங்கும அவள் படிக்கவில்லை இதே ஊரில் தான் படிப்பதாகவும் அதுமட்டுமல்லாமல் நமது டியூஷனில் படிப்பதாகவும் அந்த பெண் வேறு யாருமல்ல அவள் தான் என்று எங்களுக்கு காமித்தான் ...
எங்களுக்கோ அச்சரியம் இவன் எப்படி காதலித்தான் என்று (படிப்ஸ் அதான் )?
அதுமட்டுமில்லாமல் எங்களுடன் டியூஷனில் படிக்கும் சக பெண்ணே என்றதும் ஆச்சரியத்திற்கு மேல் அச்சரியம் ....

நாங்கள் இருவரும் அவனை அந்த பெண்ணிடம் பேச வைக்க முயற்சி செய்வோம் ஆனால் அவனோ பேச மாட்டான் ஏன் அந்த பெண் முன்னாடி உட்கார்ந்து இருந்தாலும் அவளை பார்க்க மாட்டான் நாங்கள் எவ்வளவு சொல்லியும் இதை அவன் திருத்திகொள்ளவில்லை நானோ "இது நல்ல chance டா டியூஷனில் அதிக நேரம் ((மாலை )5-8.30 sometimes 5-10.30 ) இருக்கறா அதனால போய் பேசு இல்லனா அவள பாத்துகிட்டே இரு அப்பதான் அவ உன்ன கவனிப்பா இப்படியே பேசாம இருந்தா இந்த டியூஷன் மாதிரி வேற நல்ல சந்தர்பம் கெடைக்காது " என்றேன் ....அவனோ அதை அவ்வளவாக சட்டை செய்யவில்லை ஆனால் அவள் வீட்டிற்கு செல்லும்போது மிகவும் வருந்துவான் நாங்கள் டியூஷன் சாரிடம் கேட்டு 7மாதம் டியூஷனில் அவருடன் தங்கி படித்தோம் அதனால் அங்கேயே தான் இருப்போம் காலையில் வீட்டுக்கு சென்று குளித்துவிட்டு பள்ளிக்கு சென்று விடுவோம் பிறகு மாலையில் டியூஷனில் வந்து தங்கிடுவோம் சாப்பாடு பெரும்பாலும் ஓட்டலில் தான் ...

இவ்வாறே மாதங்க கடந்தன அவளே முன்னாடி பேச வந்தாலும் தலையை மட்டும் ஆட்டி விட்டு பேசாமல் அமைதி காப்பான் பேச மாட்டான் அவனை அப்பெண்ணிடம் பேச முயற்சி செய்து நானே அப்பெண்ணிடம் பேச தொடங்கிவிட்டேன் (கொஞ்சம் தான் ரொம்ப நேரம் பேச மாட்டேன் )....

இந்த விஷயத்தை டியூஷனில் உள்ள எங்கள் நால்வறுகும் தோழியாக இருந்த ஒரு பெண்ணிடம் கூறினோம் (பசங்க மூணு பெரும் ) அவளும் அவளிடம் சொல்லுவதாகவும் கூறினால் ஆனால் அடுத்த நாள் தான் அவளிடம் இதை சொல்லவில்லை என்றும் அவளை காதலிக்க வேண்டாம் வேறு ஒரு பெண்ணை காதலித்தால் பரவாயில்லை என்றால் எங்களிடம் என் நண்பனை நோக்கி ...

நாங்கள் என் என்று கேட்டதற்கு அவள் வேறு ஒரு ஆணை காதலிப்பதாகவும் அது மட்டுமின்றி அவள் வேறு சாதி பெண் என்று அதனால் வேறு பெண்ணை பார் என்று கூறினால் ...



பிறகு அவனிடம் அந்த பெண்ணை மறந்துவிட வேண்டும் என்றும் கூறினோம் ஆனால் அவனோ என்னால் மறக்க முடியவில்லை என்றும் நான் அவளை காதலிக்க கூடாது என்பதற்காக நம் தோழி அவ்வாறு என் காதலி வேறு ஒருவனை காதலிப்பதாக போய் கூறுகிறாள் என நினைக்கிறேன் என்று கூறுவான் ...
நான் அந்த  நேரத்தில் என் காதலியை காண அவள் பள்ளிமுன் நின்றே சில காலங்கள் கழிந்ததால் என்னால் அவன் காதலில் இடுபாடு கட்ட முடியவில்லை பிறகு கொஞ்ச நாட்களில் அவன் அந்த பெண்ணை மறந்துவிட்டதாக கூறிநான் நாங்களும் கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்தோம் ....



12ஆம் வகுப்பு தேர்வே நடந்து முடிந்துவிட்டது ஆகையால் எல்லாரும் டியூஷனில் இருந்து விடைபெறு வீட்டில் இருந்தோம் இருப்பினும் அடிக்கடி டியூஷன் வந்து சந்தித்து கொள்வோம் ஊர் சுத்துவோம் ....



அனால் காதல் யாரை விட்டது அந்த பெண் யாரையும் காதலிக்கவில்லை என்றும் அது பொய் என்றும் ஒரு தகவல் அதே பெண் மூலம் என் நண்பனுக்கு தகவல் கிடைத்ததி பிறகு என்ன மறைத்து வைத்த காதலை மறுபடியும் ஆரம்பித்துவிட்டான் ...



அவன் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தான் ஆனால் அவளோ குறைந்த மதிப்பெண்ணே எடுத்திருந்தால் அதனால் டியூஷன் பக்கமும் அவள் ஏனோ வரவில்லை ....



அவள் கோவையில் ஒரு ஏதோ ஒரு கல்லூரியில் சித்த மருத்துவ படிப்பில் சேர்ந்திருப்பதாக கேள்வி பட்டான் என் நண்பன் அதனால் அவனும் கோவையிலேயே ஒரு கல்லூரியில் mechanical engineering சேர்ந்தான் நான் ஒராளுக்கு மதிப்பெண் எடுத்திருந்ததால் கோவையில் தமிழக வேளாண்மை கல்லூரியில் சேர்ந்தேன் என் மற்றொரு நண்பனோ கொஞ்சம் என்னை விடம் மதிப்பெண் குறைவாக வாங்கி பாவை கல்லூரியில் mechatronics சேர்ந்துள்ளான் ....

என் நண்பன் தன் கல்லூரி தோழிகள் மூலம் அந்த பெண்ணின் அப்பாவிற்கு போன் செய்து எந்த கல்லூரி என்பதை உறுதி படுத்திக்கொண்டான் அவளுடைய அப்ப அதிக கேள்வி கேட்பதால் தன்னால் அவளுடைய போன் என்னை கேட்க முடியவில்லை என்று கூறியிருக்கிறாள் அவனின் கல்லூரி தோழி (அவனிடம் அந்த கல்லூரி பெண்களே முன்வந்து பழகியதாகவும் அதனால் தன் காதல் பற்றி தெரிந்து உதவியதாகவும் கூறினான் ).....

நாங்கள் கல்லூரியில் விடுமுறை வந்ததால் (பொங்கள் விடுமுறை ) சந்தித்தோம் அவன் என்னிடம் அவள் வீடு பக்கம் போகலாம் வருகிறாயா என்று கேட்டான் நானும் அவனிடம் பைக்கில் சென்றோம் போகும்போது அவன் என்னிடம் ஒவ்வொரு விடுமுறையின் போதும் தான் அவள் வீட்டின் பக்கம் வந்து போவதாகவும் ஆனால் அவள் மட்டும் வீட்டிற்கு வெளியே வருவது இல்லை என்று கூறி வருத்தப்பட்டான் நான் அவனிடம் கவலைப்படாதே நான் இன்று உன்னுடன் வருவதால் கண்டிப்பாக அவளை கடிப்பாக நீ காண முடியும் என்று நம்பிக்கை கூறினேன் சொன்னபடியே அவளும் அவளுடைய வீட்டின் வெளியில் அமர்ந்து கொண்டிருந்தால் நாங்கள் ரோட்டில் இருந்து பார்த்த பொழுது அவள் முடியை அவள் பாட்டி சீவிகொண்டிருந்தது போல் இருந்தது அப்படியே வண்டியில் சிறிது தூரம் சென்று பிறகு மீண்டும் அவள் வீட்டின் எதிரே உள்ள அவளின் மல்லிகை கடையில் கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி சாப்பிட்டு விட்டு வண்டியை நான் ஓட்ட எடுத்தேன் அவனிடம் நான் சரியாக அவள் பார்க்கும் வண்ணம் வண்டியை நிறுத்துவதாகவும் அப்பொழுது அவளை நீ பார் பிறகு அவளும் உன்னை பார்க்க நேரிடும் என்று வண்டி மக்கர் செய்வது போல் வேண்டுமென்றே வண்டியை அவள் பாக்குமாறு நிறுத்தினேன் எங்கள் நல்ல நேரம் அவள் அப்பொழுது ரோட்டையே chairஇல் அமர்ந்து கொண்டு பார்த்துக்கொண்டிருந்தாள் ஆனால் நண்பனோ வழக்கம் போல 2 ,3 நொடிகள் மட்டும் பார்த்துவிட்டு திரும்பி கொண்டான் அந்த பைத்திய காரன்ஆனால் அவள் கண்டிப்பாக எங்களை பார்திருப்பல் என்று வண்டியை வீட்டுக்கு திருப்பினோம்வரும் வழியில் அவனை திட்டிக்கொண்டே போனேன் இவ்வாறு இருப்பவர்கள் ஏனடா காதல் செய்கிறீர்கள் இவ்வளவு தூரம் பார்க்க வந்துவிட்டு ஏண்டா கொஞ்ச நொடிகள் மட்டும் பார்த்துவிட்டு திரும்பினாய் என்று சரமாரியாக திட்டி தீர்த்தேன் ....

நானோ சும்மா இல்லாமல் எங்கள் டியூஷன் தோழியிடம் போன் செய்து நம் நண்பனால் அவளை மறக்க முடிய வில்லை என்றும் அதனால் அவளின் போன் நம்பரை கண்டுபிடித்து தரும்படியும் கேட்டேன் அவ்வாறு தந்தாள் அவளிடம் இவன் ஒரு முறை போன் செய்து தன் காதலை தெரிவிப்பதாகவும் அவள் ஒப்பு கொள்ளவில்லை என்றால் விட்டு விடுவதாகவும் கூறினேன் ........
அவளும் சரி ஆனால் நான் டியூஷன் சாரிடம் கேட்டு விட்டு தான் தருவேன் என்றால் நானும் சரி எப்படியாவது போன் எண் வந்தால் சரி என்றேன் ...
மறுநாள் என் நண்பன் என்னிடம் no வாங்கிவிட்டாயா ? என்று கேட்டேன் நானோ இன்னும் இல்லை இனிமேல் தான் போன் செய்து கேட்கணும் இப்பொழுது நீ வை நான் அவளிடம் கேட்டுவிட்டு உன்னிடம் கூறுகிறேன் என்று கூறிவிட்டு எங்கள் தோழிக்கு போன் செய்து பேசினேன் அவளோ "இல்லை டா அவள அவன் லவ் பண்றத நிறுத்திக்க சொல்லு அவள் வேற சதி நாம வேற அது மட்டுமில்லாம அவ வீட்ல ஒத்துக்க மாட்டாங்க அவளும் ஒத்துக்க மாட்ட நம்ம டியூஷன் சார் அவனை டியூஷனுக்கு லீவ்ல வந்து பாக்க சொன்னாரு இத பத்தி பேசணுமாம் அதுமட்டுமில்லாம அவள தவற வேற யாராவது அவன் படிக்கிற காலேஜ்ல பண்ணிக்க சொன்னாரு அவர் கூட ஹெல்ப் பண்றாராம் ஆனால் அவள மாட்டும் வேண்டாமாம் " என்றாள் ...(எங்கள் டியூஷன் சாருக்கு இந்த காதல் விஷயம் ஏற்கனவே தெரியும் இருப்பினும் அவனை திட்டவில்லை ஏன் என்று தெரியவில்லை )...

நான் இதை அவனுக்கு கூறியதும் அவன் மிகவும் மனம் உடைந்து போனான் ....
நானும் அவனை மறந்து விடு அவளிடம் பேசியிருந்தால் கூட பரவாயில்லை chance கிடைக்கும் போது பேசவும் இல்லை இப்பொழுது இப்படி பேச துடிக்கிறாய் நான் உன்னிடம் அன்றே கூறினேன் ஆனால் நீ தான் கேட்கவில்லை ஹ ம்ம் அது மட்டுமில்லாமல் அவர்கள் வீட்டில் வேறு சாதி பையனை ஏற்க மாட்டார்கள் அதுமட்டுமில்லாமல் அவளும் ஏற்று கொள்ள மாட்டாள் என்று நம் தோழியும் கூறுகிறாள் அதனால் அவளை மறந்தால் பரவாயில்லை என்றேன் அவனும் ஏதும் சொல்லவில்லை
இன்று எனக்கு போன் பண்ணி இருந்தான் ஆனால் அவனிடம் balance இல்லாததால் கால் துண்டிக்கப்பட்டது என்னிடமும் balance இல்லாததால் ஏதும் செய்ய முடியவில்லை பிறகு சிறிது நேரம் களைத்து sms அனுப்பினான் "உங்க எல்லாத்துக்கும் ஒரு அட்வைஸ் மச்சி லவ் ஜெயிக்கிற மாதிரி இருந்த மட்டும் லவ் பண்ணுங்க மச்சி "இல்லன கஷ்டம் என்பது போன்று அனுப்பினான் ..
அவன் இதுபோன்று ஒருபோதும் எனக்கும் விரக்தியாக sms அனுப்பியதில்லை
இதை பார்த்ததும் என் மனம் மிகவும் வேதனை பட்டது ஆகையால் தான் இதை பதிவாக எழுதினால் நேரம் ஆகும் அதனால் நம் வேதனையும் குறையும் என்று எழுதினேன்

உங்களுக்கு இதற்கு மேல் என்ன செய்வது என்று ஏதாவது யோசனை இருந்தால் தெரிவிக்கவும் அது என் நண்பனின் துயரத்தை போக்கலாம் ....அதுமட்டுமின்றி என் மன வேதனையையும் போக்கலாம் ...

காதல் மிகவும் வலியானது .......

3 கருத்துக்கள்:

  1. வாழ்வில் இதுவும் ஒரு அனுபவம்... ஒரு பத்து வருடம் கழித்து (delete செய்யாமல் இருந்தால்) இந்தப் பதிவை மீண்டும் படித்து பாருங்கள்... சிரிப்பாக இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. சிரிப்பாக இருந்துவிட்டு போகட்டும் .....ஆனால் இது மறக்க கூடிய ஒன்று அல்ல வேண்டுமென்றால் பாருங்கள் அதே பத்துவருடம் கழித்து இதே எண்ணத்தோட மறுபடியும் அதே காதலோடு ஒரு பதிவு போடுவேன் காதல் என்றும் மனதை விட்டு விலகாது ...

      Delete
  2. காதல் மிகவும் வலியை தரக்கூடியது ~ சேலம்ரவி >>>>> Download Now

    >>>>> Download Full

    காதல் மிகவும் வலியை தரக்கூடியது ~ சேலம்ரவி >>>>> Download LINK

    >>>>> Download Now

    காதல் மிகவும் வலியை தரக்கூடியது ~ சேலம்ரவி >>>>> Download Full

    >>>>> Download LINK 8a

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்........

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!