Saturday 5 January 2013

ப்ளாக் என்றால் என்ன ?

பிளாக் என்பது நாம்  பயன்படுத்தும் டைரியை போன்றதே அதில் உங்களுக்கு விருப்பமானதை எழுதலாம் ,பிறருடன் பகிரலாம் ..இதனை வலைப்பூ என்று கூறுவார்கள் ...அதில் நீங்கள் உங்கள் பக்கங்களை மற்றும் பதிவுகளை உருவாக்கி உங்கள் கருத்துகளை பிறரிடம் பகிரலாம் ..


உங்கள் மனதில் உள்ள கேள்விகளை உங்கள் வலைப்பூ  மூலம் கேட்கலாம் ஏன் சண்டை கூட போடலாம் இன்று இணையத்தில் நிறைய  பேர்கள் வலைப்பூக்களை பயன்படுத்தியே சண்டை இடுகின்றனர் ...
நீங்கள் எதையாவது கூரவேண்டுமேன்றாலும் இந்த வலைபூக்களை பயன்படுத்தலாம் .இதற்கு மொழி தடை இல்லை நீங்கள் எந்த மொழியிலும் உங்கள் பதிவுகளை எழுதலாம் .பெரும்பாலும் தங்கள் கருத்துக்களை ஆலோசனைகளை பிறரிடம் பகிர்வதற்கே வலைப்பூக்களை பயன்படுத்துகின்றனர் ...இணையம் மூலம் அனைவரும் உங்களுடைய கவிதைகள் ,கதைகள் ,தொழிநுட்ப குறிப்புகள் ,கருத்துகள் ,அரசியல் செய்திகள் ,சினிமா செய்திகள் ஆகியவற்றை படிக்க அவர்களுக்கு உதவியாய் இருக்கும் இந்த வலைப்பூக்கள் ...
வலைப்பதிவு  என்பது நீங்கள் உங்கள் வலைப்பூக்களில் பதிக்கும்  பதிவுகள் ஆகும் ...

இன்று இணையத்தில் இலவசமாக வலைப்பூ உருவாக்க நிறைய தளங்கள் உதவுகின்றன ...பெரும்பாலும் கூகுள் வழங்கும் பிளாக்கர் தளமும் Wordpress என்கின்ற தளமும்  முன்னணியில் இருக்கின்றன ...இவை இரண்டிற்கும் நிறைய வித்யாசம் இருக்கிறது ....

இவை போன்று மேலும் சில தளங்கள் வலைப்பூ உருவாக்க பயன்படுகிறது ..

பிளாக்கர் தளம் நமக்கு நமது வலைபூக்களுக்கு googleadsense பயன்படுத்தி சிறிது பணம் சம்பாதிக்க உதவுகிறது (தமிழ் வலைப்பூக்களுக்கு இந்த அனுமதி இல்லை ) ஆனால் wordpress தளம் அவ்வாறு அணிமதிப்பது கிடையாது  ஒருவேளை நீங்கள் சொந்த டொமைனை வாங்கினால் நீங்கள் உங்கள் வலைப்பூக்களில் googleadsense  போன்றவற்றை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கலாம் ...

இது தான் என்னுடைய முதல் ப்ளாக் பதிவு இன்னும் நிறைய பதிவுகள் ப்ளாக் பற்றி எழுதவுள்ளேன் ..இப்பதிவில்  நிறைய குறைகள் இருக்கலாம் அதை பின்னூட்டத்தில் தெரியபடுத்துங்கள் ....மேலும் இப்பதிவில் ஏதாவது விடுப்பட்டிருந்தால் அதையும் தெரிவிக்கவும் ...

நன்றி ....


13 கருத்துக்கள்:

  1. குறையேதும் இல்லை. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி பரமசிவம் அவர்களே ...

      Delete
    2. ப்ளாக் என்றால் என்ன ? ~ சேலம்ரவி >>>>> Download Now

      >>>>> Download Full

      ப்ளாக் என்றால் என்ன ? ~ சேலம்ரவி >>>>> Download LINK

      >>>>> Download Now

      ப்ளாக் என்றால் என்ன ? ~ சேலம்ரவி >>>>> Download Full

      >>>>> Download LINK Qp

      Delete
  2. ரைட்டு....

    மீண்டும் முதல்லெருந்தா...

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது இன்னும் நிறைய பேர் வலைப்பூ பற்றி தெரியாதவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களுக்கு தான் இப்பதிவு ..இதை நான் மேலேயே குறிப்பிட்டு வுள்ளேன் ...என் நண்பன் ஒருவன் இணையத்தில் ஒரு புலி ஆனால் அவனுக்கு ப்ளாக் என்றாலே என்னவென்று தெரியவில்லை அவன் போன்றவர்களுக்கு இப்பதிவி உதவும் என நினைத்து எழுதினேன் ...

      Delete
  3. Replies
    1. நன்றி ஜெயதேவ் தாஸ் அவர்களே ...நீங்கள உங்கள் கருத்துக்களை தமிழில் எழுதியிருந்தால் இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் ..ஒரு வேலை உங்கள் கணினியில் தமிழில் எழுத மென்பொருள் இல்லை என்றல் இப்பதிவை http://salemravi.blogspot.in/2013/01/tamilwritter.html படியுங்கள் உங்களுக்கு கண்டிப்பாக உதவும் ...

      Delete
  4. நல்ல பதிவு பாராட்டுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவியாழி கண்ணதாசன் தோழரே ..நீங்கள் எம் வலைப்பூவில் உறுப்பினராக சேர்ந்தமைக்கு மிக்க நன்றி ..

      Delete
  5. அன்பின் சேலம் ரவி - பிளாக் என்றால் என்ன - விளக்கம் அருமை - ஒரே ஒரு தகவல் சேர்த்திருக்கலாம் - பிளாக் என்பது நாம் எழுதும் டைரியைப் போன்றதே - உண்மை - ஆனால் சிறு வேறுபாடு - நமது டைரியை எவரும் நம் அனுமதி இல்லாமல் படிக்க இயலாது - பிளாக்கினை எவர் வேண்டுமானாலும் படிக்கலாம்.

    நல்வாழ்த்துகள் ரவி - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. நன்றி சீனா அவர்களே உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் ...முதலில் அந்த வார்த்தையை புத்தகம் அல்லது இதர கதை போன்ற செய்தி தாள் போன்று எழுதலாமே என்று தான் நினைத்தேன் பிறகு கொஞ்சம் சுலபமாக புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தையாய் டைரி இருக்கும் என நினைத்தேன் அதனால் தான் டைரி என்று எழுதிவிட்டேன் ...

      Delete
  6. வணக்கம் நண்பரே உங்களது பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கள் நன்றி ....

    ReplyDelete
  7. ப்ளாக் என்றால் என்ன ? ~ சேலம்ரவி >>>>> Download Now

    >>>>> Download Full

    ப்ளாக் என்றால் என்ன ? ~ சேலம்ரவி >>>>> Download LINK

    >>>>> Download Now

    ப்ளாக் என்றால் என்ன ? ~ சேலம்ரவி >>>>> Download Full

    >>>>> Download LINK hQ

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்........

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!