Friday 25 January 2013

Format factory மென்பொருள் ஆல் இன் ஆல் அழகுராஜா தான்

ஒரு வீடியோவை ஆடியோவாக மாற்ற வேண்டுமா அதே வீடியோ எந்த formatஇல் வேண்டும்? எதாவது picture இருக்கிறதா அது உங்களுக்கு எந்த formatஇல் வேண்டும் jif,jpg etc..? dvdயை வீடியோவாக மாற்ற வேண்டுமா ?...இவை எல்லாவற்றையும் பூர்த்திசெய்ய  Format factory  என்ற மென்பொருள் நமக்கு உதவுகிறது .....ஆமாம் தோழர்களே நாம் ஒரு வீடியோவை ஆடியோவாக மாற்ற தனியாக ஒரு மென்பொருளை பயன்படுத்துவோம் ...வீடியோவை 3gp,mp4...போன்ற formatகளில் மாற்ற அதற்கென்று ஒரு மொக்கையான மென்பொருளை பயன்படுத்திகொண்டிருப்போம் .....ஒரு இமேஜை வெவ்வேறு formatகளில் மாற்ற தனியாக ஒரு மென்பொருளை உபயோகப்படுத்தி கொண்டிருப்போம் ....இனி உங்களுக்கு இது போன்று பல மென்பொருட்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது ஏனெனில் இந்த எல்லா வசதிகளும் ஒரே மென்பொருளில் இருக்கிறது அதுதான் Format factory ....


ஆகையால் நீங்களும் பயன்படுத்தி பாருங்கள் மிகவும் அருமையான மென்பொருள் ஒன்ற கூற மறந்துவிட்டேன் இந்த மென்பொருளை பயன்படுத்தி ஒரு ஆடியோவின் அல்லது வீடியோவின் volumeஐ அதிகபடுத்தலாம் நான் பல முறை மொபைல் மூலம் ரெகார்ட் செய்த வாய்ஸ்களை  இந்த மென்பொருளின் உதவிக்கொண்டு volumeஐ  அதிகப்படுத்தி இருக்கிறேன் .....என்னுடைய ப்ளாக்கில் உள்ள icon கூட ஒரு இமேஜை இந்த மென்பொருள் கொண்டு iconஆக மாற்றி தான் பயன்படுத்துகிறேன் .....என் மொபைலுக்கு 3gp வீடியோ format தான் சப்போர்ட் ஆகும் அதனால் 3gp convertor போன்ற மென்பொருளை முதலில் பயன்படுத்தினேன் ரொம்ப நேரமும் பிடித்தது ஆனால் இப்பொழுதெல்லாம் Format factory ஒன்று போதும் சில நொடிகளில் என் மொபைலுக்கு 3gp formatஇல் வீடியோவை கன்வெர்ட் செய்து தருகிறது ....இதுபோன்று பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இம்மென்பொருள் ...சரி டவுன்லோட் லிங்கை கொடுக்கிறேன் கிளிக் செய்து வரும் இணையதளத்தில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் ...

நேரடி லிங்க்
வேலை செய்யவில்லை என்றால் 
இந்த லிங்கை பயன்படுத்தி டவுன்லோட் செய்துகொள்ளவும் ...

நன்றி .....

2 கருத்துக்கள்:

தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்........

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!