Saturday 6 July 2013

தமிழ் பதிவர்கள் -கைகோர்க்கலாம் வாருங்கள்

தமிழ் பதிவர்கள் கை கோர்க்க வேண்டும் ....தமிழில் நிறைய பதிவர்களும் ,வலைப்பூக்களும் இருக்கின்றன ஒவ்வொரு நாளும் புதிய பதிவர்களும் வருகின்றனர் ......................


இருப்பினும் தமிழில் போதிய அளவு தகவல் கிடைப்பதில்லை என்பதே உண்மை ...தமிழர்கள் நிறையபேர் கணினி பொறியாளர்களாக உள்ளனர் ஆனால் தமிழில் இணையத்தில் ஒரு மென்பெருள் உருவாக்குவது என்று தேடினால் எத்தனை பக்கங்கள் வருகின்றன ?
மென்பொருளை உருவாக்க பயன்படும் மொழியை கற்க இணையத்தில் தேடினால் அதுவும் கிடைப்பதில்லை .............
தமிழ் தளங்களுக்கு adsense கிடைக்கவில்லை என்றால் நாம் தான் அதற்கு வழிவகை செய்ய வேண்டும் இப்பொழுது google நிறுவனத்தில் முக்கியமான பொறுப்பில் கூட தமிழர்கள் இருகின்றனர் அவர்களிடம் இதை எடுத்து செல்ல முடியாதா ?
எது செய்தாலும் வேலைக்கு ஆகவில்லை என்றால் நாமே google adsense போன்ற ஒன்றை உருவாக்கலாமே !!!!
தமிழ் மொழிக்கு மட்டுமல்லாது பொதுவாக அணைத்து மொழிக்கும் வழிவகை செய்யலாமே ?
நாம் ஒன்னும் இணையத்திலும் ,கணினி பற்றிய விசயத்திலும்  சளைத்தவர்கள் இல்லையே ?
.
.
.
இங்கே இணையத்தில் உலாவரும் பலருக்கு தமிழில் இணையதளங்களும் ,வலைப்பூக்களும் இருப்பதே தெரியவில்லை .....

நான் சில வலைபூக்களை படித்துகொண்டிருக்கும்போது என் அறைக்கு வந்த நண்பன் எப்படி தமிழில் படிக்கிறாய் ? இணையத்தில் தமிழ் உள்ளதா ? எப்படி தமிழில் தகவல்களை அறிவது ? 
போன்ற கேள்விகளை கேட்டான் ...............
இன்னும் கூட இதை பற்றி தெரியாதவர்கள் தான் அதிகம் 100 பேரில் வெறும் 10-20 பேருக்கு மட்டும் தான் இணையத்தில் தமிழ் இருபதே தெரிந்துள்ளது அதிலும் தமிழில் தகவல்களை அறியலாம் என்பது மிக சொற்ப அளவினருக்கே தெரியும் .........................
இதை எப்படி மாற்றுவது ?
தமிழில் எல்லா தகவல்களும் வேண்டாமா ?
அதற்கு நாம் என்ன செய்ய போகிறோம் ?
தமிழில் இணையத்தில் உலாவினாலோ அல்லது  எழுதிகொண்டிருந்தாலோ ஏதோ நாம் வேற்றுகிரக வாசி போல் பார்கிறார்கள் (இதை தமிழ் பதிவர்கள் 99% பேர் அனுபவித்திருப்போம் )....
இதை எப்படி மாற்றுவது ?
தமிழில் பதிவு எழுதினால் அவனுக்கு ஆங்கிலமே தெரியாது என்ற மனபாங்கு கூட பலருக்கு உள்ளது .....
இதை எப்படி சரி செய்வது ?

இங்கே நிறைய பேருக்கு கணினி அறிவு அவ்வளவு இல்லை என்ற போதிலும் நாம் தான் microsft company போன்ற நிறுவனத்தில் கொடிகட்டி பரகிரோம் .......
இதுவே அனைவருக்கும் கணினி அறிவு முழுமையாக இருந்தால் நினைத்து பாருங்கள் ..................
குறைந்தளவு வீடியோ எடிட்டிங் ,போட்டோ எடிட்டிங் செய்வது பற்றியாவது தெரிந்திருக்க வேண்டும் ............அதற்கு தமிழ் தொழில்நுட்ப பதிவர்கள் உதவ வேண்டும் ................
அணைத்து தமிழ் பதிவர்களும் சேர்ந்து ஒரு தளம் உருவாக்கி அதில் அனைத்தையும் அடக்க முயற்சி செய்ய வேண்டும் அதன் மூலம் இனைய வேலை வாய்ப்பு வழங்கும் அளவிற்கு இருக்க வேண்டும் ......................தமிழில் கணினி தொழில்நுட்பங்களையும் கற்று தரவேண்டும் இலவசமாக இல்லை என்றாலும் பரவாயில்லை இங்கே computer course செல்பவர்கள் தாங்கள் கட்டும் கட்டணத்தை விட குறைந்த அளவக்கு இருந்தால் நன்று .........

இதற்கு அணைத்து தமிழ் பதிவர்களும் இணைய வேண்டும் .................முடிந்தால் நமக்கான சமூக வலைத்தளம் கூட உருவாக்கலாம் ...........

நான் என் வலைப்பூவில் சில மாதங்களாக எந்த பதிவும் எழுதவில்லை ....நேரமின்மை காரணமாக ..........இருப்பினும் நீண்ட நாட்களாக மனதில் இருந்தவற்றை உங்கள் முன் வைத்துள்ளேன் ...................என்னோடு யாரவது சேர்ந்து இந்த மாற்றத்தை கொண்டுவர உதவ எண்ணினால் வாருங்கள் கை கோர்ப்போம் ............................என் வலைப்பூவில் பதிவு எழுத விரும்பினால் கூறவும் அதற்கு வழிவகை செய்யப்படும் ..................நானே மேற்கூறிய செயல்களை செய்துவிடுவேன் ஆனால் கணினி பற்றி அனைத்தும் தெரியாது ஆகையால் IT படித்தவர்கள் ,மென்பொருள் வுருவாக்க தெரிந்தவர்கள் ,அனிமேசன் செய்ய தெரிந்தவர்கள் ,வீடியோ ,போட்டோ எடிட் செய்ய தெரிந்தவர்கள் ,professional  webdesigners,Ms-office பற்றி தெரிந்தவர்கள்  ஆகியோர் என் வலைப்பூவில் கற்று தர முன்வந்தால் மகிழ்ச்சி அடைவேன் அல்லது சொந்தமாக செய்தாலே மிக்க மகிழ்ச்சி .......................

இதை செய்ய முடியாது என்று நினைப்பவர்கள் இங்கே  சென்று இந்த தளத்தை பாருங்கள் ஒருவர் முயற்சியால் உருவாக்கப்பட்ட இத்தளம் மிக பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது ........................ஒருவரே  இதை செய்யும் போது நம் பதிவர்கள் ஒன்று கூடினால் செய்ய முடியாத என்ன ?

நன்றி ...............


9 கருத்துக்கள்:

  1. நல்ல முயற்சி. கணினி நுட்பம் தெரிந்தவர்கள் இணைந்து செயல்பட்டால் நிச்சயம் சாதிக்கலாம்.

    ReplyDelete
  2. நிச்சயமாக சாதிக்கமுடியும் .........

    ReplyDelete
  3. அனைவரும் ஒன்றுபட்டால் முடியாதது ஒன்றுமில்லை... முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. http://www.ebizel.com/ இந்த தளம் வெறுமையாக இருக்கிறது...!

    ReplyDelete
    Replies
    1. தோழா ! அந்த தளம் மாணவர்களுக்காக செயல்படுகிறது பவான் என்பவர் தன சொந்த முயற்சியால் இந்த தாலதி உருவாக்கி உள்ளார் மேலும் 9000 ரூபாய் கட்டினால் தான் உள்ளே சென்று என்ன இருப்பது என்பதையே பார்க்க முடியும் என் நண்பன் ஒருவன் இத்தளத்தில் மெம்பராக உள்ளான் ....அதில் எண்ணற்ற சேவைகள் உள்ளன எடுத்துகாட்டு css,html,php,java போன்றவற்றை வீடியோ மூலம் கற்று கொள்ளலாம் ....தமிழும் அதில் அடக்கம் என நினைக்கிறன் .....நண்பர்களை சேர்துவிடுவதன் மூலம் பணம் கூட சம்பாதிக்கலாம் .......இந்த தளத்தை பற்றி முழுமையாக அறிய ஒரு பெரிய பதிவே தேவை படுகிறது ..அதை ஒரு நாள் பதிவு செய்கிறேன் நன்றி

      Delete
    2. //http://www.ebizel.com/ இந்த தளம் வெறுமையாக இருக்கிறது...!//தளத்தில் நுழைந்தால் கீழே வலதுபுறத்தில் skip என்பது இருக்கும் அதை கிளிக் செய்தால் தளத்திற்கு செல்லலாம் ...இல்லையேல் இதை பயன்படுத்தவும் http://www.ebizel.com/index1.php.....நன்றி

      Delete
  5. உங்கள் தளம் திறந்தவுடன் வரும் Facebook Like Page-யை எடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்... Like-செய்யாமல் உங்கள் தளத்தை யாரும் படிக்கவும் முடியாது... அதை சரி செய்து விடலாம்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. இல்லை தோழா நம் வலைப்பூவிற்கான முகநூல் பக்கத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை ஆகையால் தான் இவ்வாறு வைத்துள்ளேன் போதிய லைக்குகள் கிடைத்தவுடன் தூக்கிவிடுகிறேன் ......இடைஞ்சல் என்று கூறினால் கூறினால் மட்டுமே நீக்குவது பற்றி யோசிக்க முடியும் .....

      Delete
  6. என் பதிவுக்கே இப்பொழுது தான் ஒரு லைக் தமிழ்மணம் மூலம் கிடைத்துள்ளது அதையும் பொறுக்காமல் யாரப்பா அது dislike செய்தது ......

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்........

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!