Tuesday 18 December 2012

பவரை கையிலெடுப்போம் ! பவரை வரவைப்போம் !

திட்டமிட்டு திணிக்கபடுகிறது    
   செயற்கை மின்வெட்டு !

பவரை (அதிகாரத்தை )
  கையிலெடுப்போம் !

பவரை (மின்சாரத்தை )
  வரவைப்போம் !


என்னடா இவன் உளறுகிறான் என்று எண்ணுகிறீர்கள் அல்லவா ...
ஒன்றுமில்லை நான் ஞாயிற்று கிழமை சேலம் புதிய பேருந்து நிலையத்திலுருந்து நான் கோவைக்கு செல்ல பேருந்தில் அமர்ந்து இருந்தேன் அப்பொழுது அங்கு வந்த ஒரு மர்ம ஆசாமி மேற்கண்டவாறு கூறி எல்லாரிடமும் நன்கொடை கேட்டான் நானும் என்னிடம் சில்லரையாக இருந்த 10 ரூபாயை கொடுத்தேன் அதற்க்கு பதிலாக அவர் எனக்கு ஒரு நோட்டிசை கொடுத்தார் அதில் உள்ளவற்றை தான் இன்று உங்களிடம் பகிர உள்ளேன் ...

அன்பார்ந்த உழைக்கும் மக்களே !  

பதினாறு மணிநேர மின்வெட்டால் இருண்ட தமிழகத்தில் தினந்தோறும் மக்கள் புழுங்கி சாகிறார்கள் .மின்சாரம் இன்றி கண் முன்னே அழியும் பட்டறை ,விசைத்தறி  மற்றும் சிறு ,குருதொழில் நிறுவனங்கள் ,தண்ணீர் இன்றி கருகும் பயிர்கள் ,கண்ணீரிலும் கடனிலும் தவிக்கும் விவசாயிகள் ,தூக்கமின்றி தவிக்கும் நோயாளிகள் ,முதியவர்கள் ,தூங்காமல் அழும் குழந்தைகள் ,படிக்க முடியாமல் பதறும் மாணவர்கள் ,பகலில் வேலைஇழந்து இரவில் தூக்கம் இழந்து பட்டினி சாவை நெருங்கும் லட்சக்கணக்கான் கூலி தொழிலாளர் வர்க்கம் .எப்போது மின்சாரம் வரும் என்று மின்சார அதிகாரிகளுக்கே தெரியாத அவலம் ..!

  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நன்கே மாதங்களில் மின்வெட்டை போக்கி மிக மின் மாநிலமாக்கி காட்டுவோம் என்று சொன்னார் முதலமைச்சர் ஜெயலலிதா .ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் ஆகின்றன .அனால் ,மின்வெட்டு 18  மாதமாக உயந்தது தான் மிச்சம் .அது மட்டுமல்ல ,2013 ஜூன் மாதம்  வரையில் நிலைமை மாறாது என்கிறார் மினசாரத்துரை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ,பொய் சொல்லி மக்களிடம் வாங்கிய ஜெயலலிதா இன்று பேச மறுக்கிறார் .எப்போது மின்சாரம் வரும் என போராடினால் அம்மாவின் சார்பில் போலிசின் தடிக்கம்பு தான் வருகிறது .

சமச்சீர்  மின்வெட்டை உடனே அமலாக்கு !

 தமிழகத்தின் அன்றாட மின்தேவை 12,000 மெகவாட்,பற்றாக்குறை 4,500 மெகாவாட் ,தற்போதய உற்பத்தி 7,500 மெகாவாட் மட்டுமே .போதிய மின் உற்பத்தி இல்லை என்கிறது அரசு .அனால் ,இந்த பற்றாக்குறையை தமிழகம் முழுவதும் பகிர்ந்து  மின்வெட்டை அமல்படுத்தாமல் ,ஹூண்டாய் ,ப்போர்ட் ,ரெனால்ட் நிசான் ,டைம்லர்  போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு 1,800 மெகாவாட்டில் 24மணி நேரமும் தடையற்ற மின்சாரம் ,சென்னைக்கு 23 மணி நேர மின்சாரம் ,அனால் மற்ற எஞ்சிய இடங்களுக்கு 3,500 மெகாவாட்டில் 16 மணி நேர மின்வெட்டு .
சென்னையில் பன்னாட்டு நிறுவனங்கள் ,மால்கள் ,நட்சித்தர விடுதிகள் ,அதிகார வர்க்கம் ,பணக்காரர்கள் இருப்பதால் சென்னைக்கு சலுகை ,கிராமங்களில் விவசாயத்திற்கு மின்சாரம் இல்லை .கார் கம்பனிகளுக்கு சலுகை விலையில் மின்சாரம் ,அவன் வெளியில் வாங்கலாம் ,ஜெனரேட்டரில்  உற்பத்தி செய்யலாம் ,இருந்தும் அவனுக்கு சலுகை ,நமக்கு மின்வெட்டு .இது என்ன நியாயம் ?பற்றாக்குறை என்றால் பகிர்ந்து அளிப்பது தானே நீதி ?கக்கூசுக்கு ஏ .சி. போட்டிருப்பவனுக்கு 23 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் .அனால் வெளிச்சத்துக்கு ஒரு பல்பும் ,கொசுக்கடியும் ஒரு மின்விசிறியும் பயன்படுத்தும் ஏழைக்கு 16 மணி நேர மின்வெட்டா ?சமச்சீராக மின்சாரத்தை விநியோகித்தால் மின்வெட்டில் பெரும்பகுதி ஒரே நாளில் குறைக்க முடியும் .

முடக்கி வைத்திருக்கும் அரசு மின்நிலையங்களை  உடனே இயக்கு !

 தமிழ்நாடு மின்வாரியத்திற்கு சொந்தமான குத்தாலம் மற்றும் வழுதூரில்  உள்ள எரிவாரியும் மின்நிலையங்களை பழுது நீக்கப்பட்டு இயக்கினால் 288 மெகாவாட் உடனே நமக்கு கிடைக்கும் .தனியார் எரிவாயும் மின்நிலையங்கள் லாபம் ஈட்டவேண்டும் என்பதற்காக மேற்படி அரசு நிறுவனங்களை முடக்கி வைத்திருப்பதை தவிர வேறு என்ன காரணம் ?மேலும் உற்பத்திக்கும் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு நிலையங்களை உடனே இயக்கினால் உடனே நமக்கு 1,547 மெகாவாட் கிடைக்கும்.இருந்தும் இயங்காமல் இருப்பதற்கு காரணம் என்ன ?
ஆந்திரா மாநிலம் சிம்மத்திரி அனல் மின்நிலையத்தின் மூலம் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தை நாம் கேட்டு பெறாததால் சட்டத்திற்கு புறம்பாக மத்திய அரசு ஆந்திர மாநிலத்துக்கே தாரை வார்த்துள்ளது .ஆனால் இதற்கு காரணமோ விளக்கமோ கூறப்படவில்லை .இது அரசு துரையின் திறமையின்மை அல்ல .

   டாமின் குவாரிகளிலிருந்து கிரானைட் திருடுவதற்கு பி .ஆர் .பி .-க்கு  எல்லா அரசுகளும் ,அதிகாரிகளும் துணை நின்றது போல ,தனியார் தொலைபேசி வளருவதற்காக பி .எஸ் .என் .எல் .சேவையை அரசும் ,அதிகாரிகளும் திட்டமிட்டே முடக்குவது போல் ,ஆம்னி  பஸ்  முதலாளிகளின் கொள்கைக்காக அரசு பேருந்துகளை நொண்டியாக்கி வைத்திருப்பதை போலத்தான் இதுவும் ,அரசு மின் நிலையங்கள் உற்பத்தியை தொடங்க வேண்டுமானால் ,மின் உற்பத்தி ,விநியோகத்திளிருந்து தனியார் முதலாளிகளை அகற்ற வேண்டும் ..
தனியார் மின் உற்பத்தி நிலையங்களை அரசுடமை யாக்க வேண்டும் .
    மின்வெட்டுக்கு எதிரான நமது போராட்டம் ..கட்சிகள் ,அமைப்புகள் ,சங்கங்கள்  என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பாதிக்கப்பட்ட  மக்களாய் ஓரணியில் அணி திரள்வோம் ! வெற்றி பெறுவோம் !

                        புதிய ஜனநாயகம் 
                        புதிய கலாச்சாரம் 

இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கிழே உள்ள share பட்டனை சொடுக்கி உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் ...
நன்றி ...

2 கருத்துக்கள்:

  1. அவரப் பாத்தா மர்ம ஆசாமி தெரியுதா..........???????????

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது இவ்வாறு பதிவில் வார்த்தைகளை எழுதினால் தானே அனைவரும் ரசிக்கிறார்கள் ....

      Delete

தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்........

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!