
தேவையில்லாத வலைதளத்திற்கு சென்று எதையாவது பதிவிறக்கம்
செய்வோம் ,ஆனால் அத்தளம் பதிவிறக்கம் செய்வதற்கு தங்கள் தளத்தில் ஒரு கணக்கை உருவாக்க சொல்லும் .நாமும் வேறு வழியின்றி நமது இமெயில் ஐடியை வைத்து ஒரு கணக்கை உருவாக்கி நினைத்தவற்றை பதிவிறக்கம் செய்துகொள்வோம் .
இப்பொழுதுதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது ஏனென்றால் நாம் பதிவு செய்துக்கொண்ட தளங்கள் நமது இமெய்லுக்கு அடிக்கடி தேவையில்லாத விளம்பரங்கள் அல்லது மெய்ல்களை நமக்கு அனுப்பும்
,இதனால் நமது இன்பாக்ஸில் நிறைய மெய்ல்கள் குவிந்திருக்கும் .இப்பிரச்சினையை தீர்ப்பது எப்படி என்பதே இப்பதிவு ..



Mailinator என்ற தளம் இந்த பிரச்சனையை தீர்க்க உதவுகிறது .முதலில் உங்கள் இமெயிலை திறந்து எதாவது ஒரு மெய்லை உருவாக்கி உங்கள் விருப்பமான பெயருக்கு பக்கத்தில் @ஐ சேர்த்து அதனுடன் .mailinator.com என்பதை சேர்த்து அந்த மெயிலை அனுப்புங்கள்.எடுத்துகாட்டாக நான் வணக்கம் என்று ஒரு மெயிலை உருவாக்கி அதை salemravi@mailinator.com(இதில் salemravi என்பதற்கு பதிலாக எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்) என்ற முகவரிக்கு அனுப்பினேன் .பிறகு இந்த லிங்கிர்க்கு செல்லுங்கள்
அதில்
Check your Inbox!
என்பதில் நீங்கள் உங்கள் மெயிலில் இருந்து அனுப்பிய முகவரியை உள்ளிடவும் ( எடுத்துகாட்டாக நான் அனுப்பிய முகவரி salemravi@mailinator.com) உள்ளிட்டவுடன்
என்பதை சொடுக்கி உள்ளே நுழையுங்கள் ..

உள்ளே சென்றால் நீங்கள் அனுப்பிய மெயில் இன்பாக்சில் இருக்கும்.
இது என்ன புதுமையாக இல்லயே இதுவும் சாதாரன மெயிலை உருவாக்குவது போல்தான் உள்ளது என்று எண்ணிவிடாதீர்கள்...இனிமேல் தான் இவ்வளவு நேரம் நீங்கள் இப்பதிவை படித்ததர்கான பயன் கிடைக்க பொகிறது...
இனிமேல் நீங்கள் உங்கள் mailinator மெயில் ஐடியை வைத்து அதாவது எனது salemravi@mailinator.com போன்று நீங்கள் உருவாக்கிய mailinator மெயிலை பயன்படுத்தி நீங்கள் இனிமேல் தேவைய்ல்லாத தளங்களில் கணக்குகளை உருவாக்குங்கள்.அவர்கள் அனுப்பும் ஸ்பாம் அல்லது விளம்பரங்கள் உங்கள் mailinator மெய்யிலுக்கு சென்றுவிடும் அதுமட்டுமல்ல அந்த அனுப்பப்பட்ட ஸ்பாம்,மெயில்கள் அல்லது விளம்பரங்கள் தானாகவே அழிந்துவிடும் என்பதுதான் இத்தளத்தின் கூடுதல் சிறப்பு.......
இனி தேவையற்ற இடங்களில் உங்கள் mailinator மெயில் ஐடியை பயன்படுத்துங்கள்....
முக்கியமான குறிப்பு:
mailinator மெயில் ஐடியை உருவாக்க முதலில் நீங்கள் விரும்பும் பெயருடன்( eg .yourchoice@mailinator.com) @mailinator.com என்பதை இணைத்து அதை அனுப்புனர் முகவரியாக இட்டு ஒரு மெயிலை அம்முகவரிக்கு அனுப்பவேண்டும். பின் அத்தளத்தில் சென்று மீதி செயலை செய்யவேண்டும்.....
சந்தேகங்கள் அல்லது கருத்துக்களை பின்னூட்டத்தில் இடவும்..
0 கருத்துக்கள்:
Post a Comment
தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்........