Wednesday, 16 January 2013

எளிதில் ஆங்கிலத்தில் பேச இங்க வாங்க ...

ஆங்கிலம் இன்று உலகம் முழுதும் பயன்பாட்டில் இருப்பதால் நாம் அனைவரும் அங்கிலத்தை தெரிந்து வைத்திருப்பது பயனுள்ளதாகும் .....
ஆனால் எங்கே போய் கற்றுகொள்வது என்று நீங்கள் கேட்டால் நான் spoken english class போ என்று நான் சொன்னால் நீங்கள் கடுப்பாகுவீர்கள் என்று எனக்கு தெரியும் ...
அவ்வாறு  எதாவது class சென்றாலும் நமக்கு பயன் உண்டுதான் இருந்தாலும் எவன் class க்கு செல்கிறான் என்ற எண்ணம் நம் மனதில் உள்ளது இதற்கு காரணம்  பணம் கொஞ்சம் செலவாகும் அதுமட்டுமில்லமால் சனி ,ஞாயிறு என்று விடுமுறை நாட்களை செலவிட வேண்டும் என்பதால் தான் .....
இதுவே இணையத்தில் கற்கலாம்

Wednesday, 9 January 2013

தமிழ் மேல் எனக்கு உள்ள கோபம்

கோபம் !கோபம்!கோபம் !கோபம்!கோபம் !கோபம்!கோபம் !கோபம்!கோபம்!
தமிழ் மேல் எனக்கு மிகுந்த கோபம் உள்ளது ....
தமிழ் என்னதான் பழமை வாய்ந்த மொழி திராவிட மொழிகளின் தாய் என்று இருந்தாலும் ஏன் உலக மொழிகளின் தாய் தமிழ் என்று பாவாணர் போன்றவர்களும் நிறைய தமிழ் அறிஞர்களும் சில மேலைநாட்டு அறிஞர் கூறியிருந்தாலும் (யார் இவ்வாறு கூறியது பற்றி நான் இணையத்தில் படித்திருக்கிறேன் சரியாக அவர்களின் பெயர்களும் அந்த வலைப்பூவின் பெயர்களும் ஞாபகம் இல்லை அதனால் என்னை மன்னியுங்கள் ஞாபகம் வந்தாலோ அல்லது இச்செய்தியை பற்றி வேறு எங்காவது கண்டாலோ அதை கண்டிப்பாக பதிவிடுகிறேன்  ) தமிழை தமிழர்கள் அவ்வளவாக நேசிப்பதில்லை என்பதே உண்மை இதை எதிர்த்து வாதம் வேண்டுமானால் செய்யலாம் அனால் உண்மை நிலை இதுவே ...ஒரு சின்ன உதாரணம்

வலைப்பதிவுகள் (Blog posts ) ஒரு அறிமுகம்

ப்ளாக் என்றால் என்ன என்பதை பற்றி கொஞ்சம்  ஒரு பதிவில் கூரியிருந்தேன் அதிலே வலைபதிவுகள் பற்றியும் சிறிதளவு கூறியிருந்தேன் ..அப்பதிவை படிக்காதவர்கள் இங்கே சென்று ஒருமுறை படித்துவிட்டால் நல்லது ..

வலைப்பதிவு என்பது நம்மால் வலைப்பூவில் பதியப்படும் பதிவுகளே(போஸ்ட்ஸ் ) ஆகும் .என்னடா இவன் குழப்புகிறான் என்று சில புதியவர்களுக்கு இருக்கலாம் பதிவுகள் என்றால் ஒன்றுமல்ல நீங்கள் இப்பொழுது படித்துகொண்டிருக்கும் வலைப்பதிவுகள் (Blog posts ) ஒரு சின்ன அறிமுகம்  என்பதே  என்பதே   ஒரு பதிவு(post)  தான் ..இப்பொழுது அனைவருக்கும் புரிந்திருக்கும் என நம்புகிறேன் ...

ப்ளாக்கரில் ஒரு பதிவை உருவாக்க டாஷ்போர்டில் சென்று நியூ போஸ்ட் என்பதை கிளிக் செய்தால் ஒரு பேஜ் ஓபன் ஆகும் அதில் நீங்கள் உங்கள் பதிவுகளை எழுதலாம் அதில் உள்ள ஆப்சன்களை பற்றி இனி வரும் பதிவுகளில் விரிவாக பார்க்கலாம் (அப்ப எதுக்கு navbar பற்றி முன்னரே ஒரு பதிவு போட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு அப்பறம் தான navbar பத்தி சொல்லிருக்கணும் ,இப்படின்னு நீங்க கேக்கறது புரியுது என்ன பண்றது என் நண்பன் ஒருத்தன் என்னுடைய ப்ளாக் என்றால் என்ன என்ற பதிவை படித்துவிட்டு பிறகு அதற்கு அப்பறம் நான்  பதிவிட்ட navbar நீக்குவது  எப்படினு  நான் எழுதன பதிவையும் படிச்சிட்டு டாய் ப்ளாக்னா  என்னனு சொன்ன உடனே navbarனு என்னனமோ சொல்ற ஒரு வரிசையா கோர்வையா எழுதுடா முதல்ல வலைப்பதிவு னா என்னனு சொல்லு அப்பறம் அதல உள்ள ஆப்சன் பத்தி  சொல்லு அப்படியே ஒன்னொன்னா சொல்லு என்று சொன்னான் அதனால தான் இனிமே ஒரு வரிசையா எல்லாத்தையும் எழுதலாம்னு ஆரம்பிச்சுருக்கேன் ..(எப்படியோ நண்பன் மேல் பலி போட்டுவிட்டார் என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது ஹி ஹி ) )

ப்ளாக்கரில் ஒரு பதிவை எழுத எழுத தானாகவே சேவ் ஆகிக்கொண்டே இருக்கும் இணைய இணைப்போ அல்லது நமது கணினி off ஆனாலோ எந்த பிரச்னையும் இல்லை நாம் எழுதிவைத்த வரைக்கும் draft என்ற பெயரில் சேவ் ஆகியிருக்கும் அதனால் மீண்டும் அதை எடிட் செய்து கொள்ளலாம் ....பிறகு அதை publish செய்தால் வேலை முடிந்தது ...

பிளாக்கர் பற்றி மட்டும் தான் என் வலைப்பூவில் கூறவுள்ளேன் wordpress பற்றி கூறப்போவதில்லை ......
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் ..

நன்றி ...



Saturday, 5 January 2013

பிளாக்கரில் nav barஐ சுலபமாக நீக்குவது எப்படி (புதியவர்களுக்கு)?

நாம் நமது ப்ளாக்கை முடிந்தளவு அழகாக வைக்கவே நினைக்கிறோம் ..நீங்கள் கவனித்திருப்பீர்கள் நமது வலைப்பூவில் nav bar என்று ஒன்று இருக்கும் ஒரு மெனு போலவே காட்சியளிக்கும் அதில் next blog என்று ஒன்று இருக்கும் அதை கிளிக் செய்தால் பல சமயங்களில் தேவை இல்லாத வலைப்பூவிற்கு செல்லும் அதுமட்டுமின்றி நமது ப்ளாக்கின் அழகை அது கெடுப்பதாக இருக்கும் அதனால்  அனைவருமே கண்டிப்பாக அதை வெருத்திருப்பீர்கள்..






அதை எவ்வாறு சுலபமாக நீக்குவது என்பதே இப்பதிவு ..

ப்ளாக் என்றால் என்ன ?

பிளாக் என்பது நாம்  பயன்படுத்தும் டைரியை போன்றதே அதில் உங்களுக்கு விருப்பமானதை எழுதலாம் ,பிறருடன் பகிரலாம் ..இதனை வலைப்பூ என்று கூறுவார்கள் ...அதில் நீங்கள் உங்கள் பக்கங்களை மற்றும் பதிவுகளை உருவாக்கி உங்கள் கருத்துகளை பிறரிடம் பகிரலாம் ..

தமிழில் சுலபமாக தட்டச்சு செய்ய சூப்பரான மென்பொருள்

நிறைய தோழர்கள் தமிழில் தட்டச்சு செய்வது குறித்து அறியாமல் இருகிறார்கள்  அவர்களுக்கு இப்பதிவு நிச்சயம் பயான்படும் ...
எல்லாரும் அழகி ,இகலப்பை மற்றும் இன்னும் பிற மென்பொருள்களை பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்கிறார்கள் அனால் அதில் நிறைய குறைகள் இருக்கின்றன ஒவ்வொரு முறையும் அந்த மென்பொருள்களை ஓபன் செய்து சில function கீகளை பயன்படுத்தி எழுத வேண்டிய சூழ்நிலை இருக்கும் ..ஆனால் நான் இன்று உங்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு சிறிய மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிக்கொண்டால் மேற்குறிப்பிட்ட பிரச்சனை இருக்காது ...

Tuesday, 1 January 2013

Speedconnect internet acceleratorv8.0 fully cracked

இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க உதவும் ஒரு மென்பொருளை பற்றி சென்ற பதிவில் கூறினேன் ஆனால் அந்த மென்பொருள் trial version என்பதால் அதனுடைய fullversionஐ  இலவசமாக பயன்படுத்த அதனுடைய crack  வெளியிடபோவதாகவும் அறிவித்திருந்தேன்....
அந்த பதிவை படித்திவிட்டு நிறையபேர்  அதனுடைய crack வேண்டுமென்று பின்னூட்டத்தில் கூறியிருந்தனர்...

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!